மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 319 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district Corona infection 319 people were affected in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 319 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 319 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 319 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது ஆண், ராகவேந்திரா நகரை சேர்ந்த 62 வயது முதியவர், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரை சேர்ந்த 40 வயது பெண், நக்கீரன் தெருவில் வசிக்கும் 24 வயது இளைஞர், மறைமலைநகர் நகராட்சியில் உள்ள கண்ணதாசன் தெருவை சேர்ந்த 45 வயது பெண், திருவள்ளூர் தெருவை சேர்ந்த 30 வயது இளைஞர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஜனகபுரி பகுதியை சேர்ந்த 32 வயது இளம்பெண், அருங்கால் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 38 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 319 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 388 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 677 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 496 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 215 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 418 பேருக்கு தொற்று உறுதி ஆனது. இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். 352 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 3,120 பேருக்கு கொரேனா பாரிசோதனைகள் மேற்கொண்டதில், 181 பேருக்கு தொற்று உறுதி ஆனது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 5 பேர் மரணமடைந்தனர். 163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டையில் உள்ள சத்தியவேடு ரோடட்டில் நடமாடும் மாதரி சேகரிப்பு வாகனம் மூலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாரகன், சுகாதார மேற்பார்வையாளர் ஜெகந்நாதுலு, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 282 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 ஆயிரத்து 645 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 55 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 498 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 32, 28, 35, 22 வயது ஆண்கள், 28 வயது பெண், பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண், 10 வயது சிறுமி ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த 30 வயது ஆண், சோமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 45 வயது பெண், 16 வயது ஆண், 52 வயது ஆண், 22 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 189 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 ஆயிரத்து 339 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 288 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 283 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 283 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 419 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது இதுவரை 404 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 296 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை தொற்றுக்கு 404 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 294 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 294 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.