நாமக்கல் மாவட்டத்தில் வங்கி மேலாளர் உள்பட 98 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் வங்கி மேலாளர் உள்பட 98 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Sept 2020 8:44 AM IST (Updated: 20 Sept 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உள்பட 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 3,898 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,900 ஆக ஆனது.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உள்பட 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

3,998 பேர் பாதிப்பு

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,998 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நாமக்கல், ராசிபுரம், வெண்ணந்தூர், கல்லுப்பாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 71 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 58 பேர் பலியான நிலையில் 3,021 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 919 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story