புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாட்டிற்காக பக்தர்கள் குவிந்தனர்.
போடி (மீனாட்சிபுரம்),
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை யொட்டி நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் ஏராளமான பக்தர் கள் வழிபாடு செய்வதற்காக குவிந்தனர். அதன்படி, போடியில் உள்ள பிரசித்திபெற்ற சீனி வாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழ மையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சுவாமிக்கு பால், பழம், தேன், நெய், இளநீர், தயிர் உள்பட 16 வகை அபிஷேகங்கள் நடை பெற்றது. அதன் பின்பு சுவா மிக்கு பெரிய திண்டு மாலை, தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய் யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
இதில் போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சமூக இடை வெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுரேஷ், பட்டாச்சாரியார்கள் கார்த்திக், குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கம்பம்
கம்பத்தில் உள்ள வேணு கோபால கிருஷ்ணன் கோவி லில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. பின்னர் அலங்கரிக் கப்பட்ட சப்பரத் தில் உற்சவர் வீதிஉலா வந்தார். சப்பரத்தை சிறுவர்கள் இழுத்து செல்ல, பின்னால் பஜனை குழுவினர் பஜனை பாடியபடியே, ஆடிப்பாடி சென்றனர். இந்த வீதிஉலா, வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கி, கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற பெருமாள் கோவில் களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

Related Tags :
Next Story