திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா இதுவரை 4,535 பேர் குணமடைந்தனர்


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா இதுவரை 4,535 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 22 Sept 2020 8:51 AM IST (Updated: 22 Sept 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 200 என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

4, 535 பேர் குணமடைந்தனர்

தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதாலும் தொழில் நிறுவனங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் அதிகம் வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 95 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Next Story