ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 95 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,499 ஆக உயர்வு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 95 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,499 ஆக உயர்வு
x
தினத்தந்தி 23 Sept 2020 3:45 AM IST (Updated: 23 Sept 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 499 ஆக உயர்ந்துள்ளது. அதில், 524 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் ராணிப்பேட்டை பழைய அஞ்சலக வீதி, சீயோன் நகர், முத்துக்கடை டீச்சர்ஸ் காலனி, எம்.பி.டி.ரோடு, சிப்காட் எமரால்டு நகர், மணியம்பட்டு அருகே உள்ள ஐ.ஓ.பி. நகர், புளியந்தாங்கல் ஏரிகோடி, அக்ராவரம் முருகன் கோவில் தெரு, புதிய அக்ராவரம் பிள்ளையார் கோவில் தெரு, சீக்கராஜபுரம் தென்றல் நகர், லாலாபேட்டை ஆகிய இடங்களில் தலா ஒருவரும், பெல் டவுன்ஷிப் பகுதியில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மூர் பிராமண தெரு, பச்சையம்மன் கோவில் தெரு, எருக்கந்தொட்டி ஆகிய பகுதியில் தலா ஒருவர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 1,400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2,180 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story