நெல்லையில் பரிதாபம்: கல்லூரி மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
நெல்லையில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 19).
இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது ஆன்லைன் சேர்க்கை மூலமாக நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து இருந்தார்.
தற்கொலை
கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிஷாந்த் திடீரென்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நிஷாந்த் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் விசாரணை
பெற்றோர் கண்டித்ததால் நிஷாந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story