கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை, பொன்னமராவதியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரத்தினம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது சொத்துக்களை தனியார் மயமாக்க கூடாது. தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு முறையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதேபோல அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார். இதில் சி.ஐ.டி.யூ. மற்றும் ஏ.ஏ.எல்.எல்.எப். தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி அரசு பணிமனை மற்றும் பஸ் நிலையம் அருகே நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கிளை செயலாளர் யோகராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story