ரேஷன் கடை ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கருவி கலெக்டர் ஆனந்த் வழங்கினார்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கருவிகளை திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கருவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கி, அதன் பயன்பாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின்கீழ் மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு) பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கான ‘பயோமெட்ரிக்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு பயிற்சி
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 714 ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்களுக்கும் ‘பயோமெட்ரிக்’ கருவியை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அதிகாரி லதா, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் அப்துல்சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story