பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு


பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு
x
தினத்தந்தி 25 Sep 2020 1:33 AM GMT (Updated: 25 Sep 2020 1:33 AM GMT)

பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி நித்யா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நித்யா பெரம்பலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூருக்கு நித்யா ஸ்கூட்டரில் சென்று விட்டு, இரவில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி, இறங்கியபோது ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி நித்யா கீழே விழுந்தார்.

சாவு

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story