உத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டம்


உத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2020 11:05 AM IST (Updated: 25 Sept 2020 11:05 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும், தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில், விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும், தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், மாவட்ட செயலாளர் சையதுகாதர் சாகிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Next Story