தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 25 Sept 2020 11:52 AM IST (Updated: 25 Sept 2020 11:52 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 73 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 796 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்டிப்பட்டி அருகே மூலக்கடையைச் சேர்ந்த 74 வயது முதியவர், தேக்கம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், போடி புதூரைச் சேர்ந்த 45 வயது பெண், தேனி அருகே பூமலைக்குண்டுவை சேர்ந்த 84 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

Next Story