தஞ்சை, நாகையில் 8 பேரின் உயிரை பறித்த கொரோனா டெல்டாவில் 365 பேருக்கு தொற்று
தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு 8 பேர் பலியானார்கள். டெல்டாவில் 365 பேருக்கு தொற்று உறுதியானது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 274 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,236 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம் அரசு மருத்துவமனை, தஞ்சை, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண், 65 வயது ஆண், 58 வயது ஆண், 65 வயது ஆண், 67 வயது ஆண், 60 வயது ஆண் ஆகிய 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது.
நாகையில் 2 பேர் சாவு
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 996 ஆக உயர்ந்து இருந்தது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் நாகை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று 45 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 45 ஆக உயர்ந்தது. 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 353 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 613 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகையை சேர்ந்த 50 மற்றும் 58 வயது ஆண்கள் 2 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்து 683 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 141 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணம் அடைந்ததால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் குணம் அடைந்தவரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 698 ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட மருத்துவமனைகளில் 1,057 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 69 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Related Tags :
Next Story