குமரி மாவட்டத்தில் நீதிபதியின் தந்தை உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி புதிதாக 89 பேருக்கு தொற்று


குமரி மாவட்டத்தில் நீதிபதியின் தந்தை உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி புதிதாக 89 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 27 Sept 2020 7:51 PM IST (Updated: 27 Sept 2020 7:51 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நீதிபதியின் தந்தை உள்பட ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கடந்த சில நாட்கள் தொற்று பரவும் வேகம் சற்று குறைவாக இருந்தது ஆறுதல் அளித்தது. ஆனால், நேற்று புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், கொரோனா கவனிப்பு மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இவர்களுடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.

நீதிபதி தந்தை இறப்பு

மாவட்டத்தில் ஏற்கனவே 260 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்தநிலையில் நாகர்கோவில் கோர்ட்டில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். நீதிபதியும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புத்தன்துறையைச் சேர்ந்த 73 வயது ஆணும், பாலப்பள்ளம் தெற்கு நீர்வக்குழியைச் சேர்ந்த 47 வயது ஆணும், அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த 33 வயது பெண்ணும், பாகோடு பகுதியைச் சேர்ந்த 61 வயது ஆணும் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். இதனால் ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

Next Story