ராசிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்


ராசிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
x

ராசிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது.

ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், தாசில்தார் பாஸ்கர், தனி தாசில்தார் கிருஷ்ணன், நகராட்சி மண்டல இயக்குனர் அசோக்குமார், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குணசீலன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அருணன், கிருஷ்ணமூர்த்தி, அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் மோனிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செங்கோட்டுவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story