மாவட்ட செய்திகள்

அரியலூரில் மேலும் 37 பேர் கொரோனாவால் பாதிப்பு பெரம்பலூரில் புதிதாக 14 பேருக்கு தொற்று + "||" + Another 37 people infected with corona in Ariyalur and 14 new infections in Perambalur

அரியலூரில் மேலும் 37 பேர் கொரோனாவால் பாதிப்பு பெரம்பலூரில் புதிதாக 14 பேருக்கு தொற்று

அரியலூரில் மேலும் 37 பேர் கொரோனாவால் பாதிப்பு பெரம்பலூரில் புதிதாக 14 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் 4 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என நேற்று மொத்தம் 37 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,673 ஆக உயர்ந்துள்ளது.


ஏற்கனவே கொரோனாவிற்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2,922 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 147 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

212 பேருக்கு பரிசோதனை

இதேபோல் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 5 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 3 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,779 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 1,628 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 212 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்
புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென குறைந்து உள்ளது.
3. தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டியது
மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.
5. புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்
மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 88.78 சதவீதம் பேர் குணமடைந்தனர்.