வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2020 3:45 AM IST (Updated: 29 Sept 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் சாதிர், வார்டு பிரதிநிதி ஏ.எம்.சாகுல் ஹமீது, ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்ணன், சி.பி.ஐ. நிர்வாகி அயூப்கான், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவருணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி அருகே உள்ள வல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை தலைவர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஷேக் அப்துல்லா, தென்காசி ஒன்றிய செயலாளர் ராமையா, காங்கிரஸ் வட்டார தலைவர் பெருமாள், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. பேச்சாளர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகரக்கட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் லூர்து நாடார் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி தலைவர் வளன் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆறுமுகச்சாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் ஜேசுஜெகன் உள்பட கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலைப்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூங்கோதை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் பேரூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரூர் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், மகளிர் மாவட்ட செயலாளர் செல்வி சங்கு கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வேலாயுதம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆழ்வார்குறிச்சி நகர செயலாளர் பென்ஸ் தலைமையில் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கோட்டை தாலூகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன்சேட்கான் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் எஸ்.எம்.ரஹீம், காங்கிரஸ் நகர தலைவர் ராமர், மாவட்ட பொது செயலாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வேலுமயில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர செயலாளர் பஷீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ், ம.தி.மு.க. நிர்வாகி அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இடைகாலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கணபதி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் காதர், முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மாணிக்கம், மனித நேய மக்கள் கட்சி பாஸித், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வடகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரசாக், மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், வடகரை பேரூர் செயலாளர் முகம்மது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் செயலாளர் அபுபக்கர் சித்திக், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் முகம்மது உசேன், மனித நேய மக்கள் கட்சி முகமது இலியாஸ், முஸ்லிம் லீக் சார்பில் முகம்மது இலியாஸ், கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஷேக்மைதீன், ம.தி.மு.க. முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்ரீபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பண்பொழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனி, ம.தி.மு.க.வை சேர்ந்த திருமலைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கருப்பையா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த டாக்டர் நவாஸ்கான், ம.ம.க.வை சேர்ந்த செய்யது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அச்சன்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சம்சுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தம்பிதுரை, இந்திய கம்யூனிஸ்டு சம்சுதீன், ம.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன், ம.ம.க.வை சேர்ந்த ஜெய்னுல் ஆப்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொது செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நகர செயலாளர் சேகனா முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சமுத்திரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முத்துசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகம்மது இக்பால், ம.தி.மு.க.வை சேர்ந்த முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கிருஷ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜான் தாமஸ், ம.ம.க. மசூது, தமிழ்ப்புலி கட்சியை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுரண்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி.நடராஜன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், ம.தி.மு.க. நகர செயலாளர் துரைமுருகன், கம்யூனிஸ்டு சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்த்துரை, நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மணி நன்றி கூறினார்.

Next Story