கதர் கிராம வாரிய ஊழியர்கள் அமைதி ஊர்வலம்


கதர் கிராம வாரிய ஊழியர்கள் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 29 Sep 2020 11:09 PM GMT (Updated: 29 Sep 2020 11:09 PM GMT)

கதர் கிராம வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி நேற்று மாலை கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கதர்கிராம வாரிய ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழுவினர் அமைதி ஊர்வலமாக சென்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கதர் கிராம தொழில் வாரிய ஊழியர் களின் கூட்டு போராட்டக் குழுவினர் 12 மாத நிலுவை சம்பளம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய சலுகை, 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், 2 ஆண்டுகளாக வழங்கப்படாத தீபாவளி போனசை வழங்க வேண்டும், அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கைகளுக்காக புதுசாரத்தில் உள்ள கதர் கிராம வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகை நோக்கி நேற்று மாலை கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கதர்கிராம வாரிய ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழுவினர் அமைதி ஊர்வலமாக சென்றனர். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சு மணசாமி தலைமை தாங்கினார்.

புதுச்சேரி கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது பெரியகடை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story