புதுச்சேரி அருகே தம்பதி பலியான சம்பவம்: பட்டாசுகள் வெடித்த குடோனில் வெடி மருந்து குவியல் மூட்டை மூட்டையாக பறிமுதல்
புதுச்சேரி அருகே பட்டாசுகள் வெடித்த குடோனில் வெடி மருந்து குவியலை மூட்டை மூட்டையாக வெடிகுண்டு நிபுணர்கள் பறிமுதல் செய்தனர்.
அரியாங்குப்பம்,
புதுவையை அடுத்த அரியாங்குப்பம் புதுக்குளம் அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 44). இவரது மனைவி பத்மாவதி (40). இவர்களுக்கு சில்சியா (17), அன்னாள் (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வசித்து வந்த வீட்டின் அருகே பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் லகோத்ராஜ் என்பவருக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. அவரது அனுமதியுடன் அந்த வீட்டை நெப்போலியன் பராமரித்து வந்தார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதையொட்டி வெளியூர்களில் இருந்து பட்டாசு தயாரிப்பதற்கான வெடி மருந்து, அதற் கான மூலப்பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து அந்த பங்களா வீட்டை குடோனாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அழுத்தம் ஏற்பட்டு அந்த குடோனில் இருந்த வெடி மருந்துகள் வெடித்தன. அடுத்தடுத்து அங்கு பதுக்கி வைத்து இருந்த பட்டாசுகள், வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
20 வீடுகள் சேதம்
இந்த சத்தம் அந்த பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் வெடிமருந்து குடோனாக பயன்படுத்தி வந்த அந்த பங்களா வீட்டின் பின்பகுதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன.
இதில் நெப்போலியன், அவரது அண்ணன் இருதயராஜ் ஆகியோரது வீடும் தப்பவில்லை. நெப்போலியன் வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் நெப்போலியன், அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் மீது விழுந்து அமுக்கியதில் இடிபாடுகளில் சிக்கி அவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது அவர்களது மகள்கள் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
வெடிமருந்து குவியல்
இந்த வெடி விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பங்களா வீட்டின் உரிமையாளரான லகோத்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி மருந்து, பட்டாசுகள் வெடித்தது எப்படி? அனுமதியின்றி அதிக அளவில் வெடி மருந்துகளை வாங்கி பதுக்கியது ஏன்? வெடி மருந்து சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெடி விபத்தில் சேதமடைந்த 3 வீடுகளில் சப்-இன்ஸ்பெக்டர் பங்கஜ் தலைமையில் 9 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். அப்போது பங்களா வீட்டின் ஒரு பகுதியில் கிலோ கணக்கில் வெடிமருந்துகள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டின் பின்புறம் உள்ள புதர்களிலும் மூட்டை மூட்டையாகவும், கட்டை பைகளிலும் வெடிமருந்துகள் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அந்த வெடிமருந்து குவியலை கைப்பற்றி, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஒப்படைத்தனர். வெடிமருந்தை சோதனை செய்ததில் அது அமோனியம் நைட்ரேட் வகை என்பது தெரியவந்தது.
வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் எத்தனை கிலோ இருந்தன என்று கணக்கிட்டு, அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :
Next Story