கடலூரில் பேரிடர் மீட்பு பணி குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடந்தது


கடலூரில் பேரிடர் மீட்பு பணி குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 30 Sep 2020 1:46 AM GMT (Updated: 30 Sep 2020 1:46 AM GMT)

கடலூரில் பேரிடர் மீட்பு பணி குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடந்தது.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சென்னை அண்ணா மேலாண்மை நிலையம் (மாநில நிர்வாக பயிற்சி மையம் ) மற்றும் வருவாய் நிர்வாக, பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறையும் இணைந்து பேரிடர் மீட்பு பணி குறித்த ஒருநாள் பயிற்சி முகாமை நடத்தியது. இதற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, பேரிடர் காலங்களில் எவ்விதமான விளைவுகள் ஏற்படும் என்பதை ஆய்வு செய்யவும், புயல், வெள்ளம், சுனாமி, கடல் அரிப்பு, பூகம்பம், வறட்சி, ரசாயன மற்றும் தொழிற்சாலைகளில் நடைபெறும் விபத்து போன்ற பல்வேறு பேரிடரிலிருந்து மீட்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பாதுகாத்துக்கொள்ளவும் இந்த எச்.வி.ஆர்.ஏ. பயிற்சி நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்களுக்காக இந்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள், தாங்கள் மேற்கொண்ட பயிற்சியின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மற்றவர்களுக்கும் தெரிவித்து பேரிடர் மீட்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதில் டாக்டர் அரசு சுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story