கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில் நாற்று நடவு பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தனர். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
நடவு பணி தீவிரம்
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை செம்மைப்படுத்த தொடங்கினர்.
விதை நாற்றாங்கால் தயார் செய்து பல்வேறு ரக நெல்லை விதைத்தனர். தற்போது விதைத்த நெல் நன்றாக முளைத்து பசுமையாக காணப்படுகிறது.
இந்த நெல்நாற்றுக்களை பிடுங்கி தயார் செய்யப்பட்டுள்ள வயல்களில் நடவு செய்யும் பணி கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story