நெல்லை, தென்காசியில் புதிதாக 135 பேருக்கு கொரோனா தூத்துக்குடியில் ஒருவர் பலி
நெல்லை, தென்காசியில் புதிதாக 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தென்காசி,
நெல்லை மாவட்டத்தில் நேற்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 25 பேரும், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.
இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, மானூர், ராதாபுரம், நாங்குநேரி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 809 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 524 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 12 ஆயிரத்து 854 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 548 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடியை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்து உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் சாவு
மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சி.டி.ஸ்கேனில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு மீண்டும் சளிமாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் நேற்று மதியம் திடீரென இறந்து விட்டார்.

Related Tags :
Next Story