மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 628 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா உறுதியானது.
7 ஆயிரத்து 359 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 049 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 16 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 57 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 18,19,23,18 வயது நபர்கள், ஆவுடையாபுரத்தை சேர்ந்த 27 வயது நபர், கே.உசிலம்பட்டியை சேர்ந்த 43 வயது நபர், ஏ.ராமலிங்கபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 53 வயது, 37 வயது பெண்கள், 10 வயது சிறுவன், காரியாபட்டி, முடுக்கன்குளம், முத்தனேரி, தொம்பு சின்னம்பட்டி, சேத்தூர், ராஜபாளையம், வைத்திலிங்கபுரம், கல்குறிச்சியை சேர்ந்த 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,436 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 932 பேருக்கு மட்டுமே மருத்துவபரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்களின் முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலையில் 7,359 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவராத நிலை உள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாத நிலை இருந்தால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை மாதிரிகளை பல்வேறு மையங்களுக்கு அனுப்பி வைத்து முடிவுகளை உடனுக்கு உடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் 6 பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். அதன்படி ராஜபாளையம் தாலுகாவில் திருவள்ளுவர் நகர், அருப்புக்கோட்டையில் எம். ரெட்டியாபட்டி, திருச்சுழி தாலுகாவில் உலக்குடி, மறையூர், சிட்டை வண்ணான்குளம், விருதுநகர் தாலுகாவில் சூலக்கரை ஆகிய பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story