ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
144 பேருக்கு தொற்று
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 7 ஆயிரத்து 264 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 178 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,132 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 91 பேர் இறந்துள்ள நிலையில், மொத்தம் 5 ஆயிரத்து 230 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story