டி.வி. நடிகை ஷிரீன் மிர்சாவுக்கு கொரோனா


டி.வி. நடிகை ஷிரீன் மிர்சாவுக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Oct 2020 2:51 AM IST (Updated: 5 Oct 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. நடிகை ஷிரீன் மிர்சாவுக்கு கொரோனா நடிகர் அர்ஜூன் பிஜ்லானி மனைவிக்கும் தொற்று.

மும்பை,

‘யே ஹே மொகப்பாதின்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டி.வி. நடிகை ஷிரீன் மிர்சா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘ஒரு வாரத்திற்கு முன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நான் அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் இருக்கிறேன். நான் நலமாக உள்ளேன்’ என கூறியுள்ளார்.

இதேபோல நடிகர் அர்ஜூன் பிஜ்லானி அவரது மனைவி நேகா ஸ்வாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ள தகவலில், நண்பர்களே எனது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நானும், எனது குடும்பத்தினரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story