மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 13 ஆயிரத்து 702 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 43 ஆயிரத்து 409 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 326 பேர் ஆட்கொல்லி வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 84 ஆக அதிகரித்து உள்ளது.
15 ஆயிரம் பேர்
இதேபோல மாநிலத்தில் நேற்று மட்டும் 15 ஆயிரத்து 48 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 11 லட்சத்து 49 ஆயிரத்து 603 பேர் (79.64 சதவீதம்) கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.
புனே மாவட்டத்தை பொறுத்தவரை புனே மாநகராட்சியில் புதிதாக 1,033 பேருக்கும், புனே புறநகரில் 814 பேருக்கும், பிம்பிரி சிஞ்வாட்டில் 496 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 22 லட்சத்து 9 ஆயிரத்து 696 பேர் வீடுகளிலும், 27 ஆயிரத்து 939 தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story