கர்நாடகத்தில், ஒரேநாளில் கொரோனாவால் பாதித்தோர் - 10,145 பேர்; பலியானோர் - 67 பேர் சுகாதாரத்துறை தகவல்


கர்நாடகத்தில், ஒரேநாளில் கொரோனாவால் பாதித்தோர் - 10,145 பேர்; பலியானோர் - 67 பேர் சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2020 3:21 AM IST (Updated: 5 Oct 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரே நாளில் 10,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 67 பேர் பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 145 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 67 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,286 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில், பாகல்கோட்டையில் 97 பேர், பல்லாரியில் 304 பேர், பெலகாவியில் 224 பேர், பெங்களூரு புறநகரில் 274 பேர், பெங்களூரு நகரில் 4,340 பேர், பீதரில் 65 பேர், சாம்ராஜ்நகரில் 141 பேர், சிக்பள்ளாப்பூரில் 128 பேர், சிக்கமகளூருவில் 227 பேர், சித்ரதுர்காவில் 122 பேர், தட்சிண கன்னடாவில் 293 பேர், தாவணகெரேயில் 106 பேர், தார்வாரில் 90 பேர், கதக்கில் 110 பேர், ஹாசனில் 307 பேர், ஹாவேரியில் 112 பேர், கலபுரகியில் 121 பேர், குடகில் 148 பேர், கோலாரில் 165 பேர், கொப்பலில் 85 பேர், மண்டியாவில் 233 பேர், மைசூருவில் 1,037 பேர், ராய்ச்சூரில் 124 பேர், ராமநகரில் 182 பேர், சிவமொக்காவில் 279 பேர், துமகூருவில் 245 பேர், உடுப்பியில் 231 பேர், உத்தரகன்னடாவில் 84 பேர், விஜயாப்புராவில் 152 பேர், யாதகிரியில் 119 பேர் உள்ளனர்.

மாதிரிகள் பரிசோதனை

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 22 பேர், மைசூருவில் 12 பேர், கொப்பலில் 5 பேர், குடகு, சிவமொக்காவில் தலா 4 பேர், துமகூரு, ஹாசன், பல்லாரியில் தலா 3 பேர் உள்பட 67 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 85 ஆயிரத்து 508 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 52 லட்சத்து 60 ஆயிரத்து 160 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 7,287 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 847 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story