மாவட்ட செய்திகள்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் பா.ஜ.க. எச்சரிக்கை + "||" + If only one country does not implement the same ration card scheme, the struggle will be over for the BJP. Warning

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் பா.ஜ.க. எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் பா.ஜ.க. எச்சரிக்கை
மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவேண்டும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை புதுவையில் அமல்படுத்தவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,

பிரதமர் நரேந்திரமோடி கொண்டுவந்துள்ள ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இந்த திட்டத்தின்படி, சொந்த மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் போது தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் படி தங்களுக்குரிய உணவு தானியங்களை அவரவர் வசிக்கும் இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.


நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மற்றும் இலவசமாக பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளை மூடி சாதனை புரிந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை அல்லது அதற்கான பணத்தை பலமாதங்களாக கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.

போராட்டம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 1 கிலோ அரிசி ரூ.3-க்கும், 1 கிலோ கோதுமை ரூ.2-க்கும் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், அங்கு வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி முழுவதும் அரசு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் பா.ஜ.க. சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் பரவலாக மழை: கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2. குமரி மீனவர்கள் 2-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்கரை பகுதியில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே குமரி மீனவர்கள் வருகிற 2-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
3. புயல் எச்சரிக்கை எதிரொலி: குமரியில் 10 ஆயிரம் மீனவர்கள் கரை திரும்பினர்
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து குமரி மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
4. புயல் எச்சரிக்கை: குளம் போல் அலையின்றி காணப்பட்ட குளச்சல் கடல்
புயல் எச்சரிக்கைக்கு மாறாக நேற்று குளம் போல் அலையின்றி குளச்சல் கடல் காணப்பட்டது.
5. நிவர் புயல்; அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை
நிவர் புயலால் கடல் சீற்றத்துடன் உள்ளதால் அடையாறு, திருவான்மியூர் கடற்கரைகளுக்கு மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை