மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி + "||" + Corona grandmother kills 149 in one day in Erode district

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மூதாட்டி ஒருவர் பலியானார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2-ந் தேதி புதிய உச்சமாக 198 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 149 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 395 ஆக உயர்ந்தது.


இதில் ஈரோடு மாநகராட்சி, கொடுமுடி, கவுந்தப்பாடி, சித்தோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூதாட்டி பலி

கொரோனாவுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 92 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் பவானியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 26-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 144 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
3. கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை தாண்டிய கர்நாடகம் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது
கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை கர்நாடகம் தாண்டி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
4. மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. மத்திய மந்திரிக்கு கொரோனா: நடிகை பாயல் கோஷ் தனிமைப்படுத்தி கொண்டார்
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை தொடர்ந்து, அவருடன் கட்சியில் இணையும் விழாவில் கலந்து கொண்ட நடிகை பாயல் கோஷ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.