ஒரேநாளில் 458 பேர் குணமடைந்தனர் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது
புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரேநாளில் 458 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 391 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 458 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ஜிப்மர் ஆஸ்பத்திரியில் முத்தியால்பேட்டை அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த 67 வயது முதியவர், தட்டாஞ்சாவடி காந்தி நகரை சேர்ந்த 81 வயது மூதாட்டி, வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 36 வயது பெண் ஆகியோரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பட்டினச்சேரி சுனாமி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டியும் உயிரிழந்தனர்.
29 ஆயிரம் பேர்
புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 6 ஆயிரத்து 509 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 29 ஆயிரத்து 277 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 513 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,569 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் 2 ஆயிரத்து 944 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
82.73 சதவீதம்
இதுவரை 24 ஆயிரத்து 221 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 455 பேர் புதுச்சேரி பகுதியையும், 46 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாம் பகுதியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் குணமடைவோர் 82.73 சத வீதமாகவும், உயிரிழப்பு 1.85 சதவீதமாகவும் உள்ளது.

Related Tags :
Next Story