நெல்லை, தூத்துக்குடியில் 136 பேருக்கு கொரோனா தென்காசியில் 38 பேருக்கு தொற்று


நெல்லை, தூத்துக்குடியில் 136 பேருக்கு கொரோனா தென்காசியில் 38 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 6 Oct 2020 12:16 AM GMT (Updated: 6 Oct 2020 12:16 AM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 136 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டனர்.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 13 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் 7 பேர் அடங்குவர். இதுதவிர மானூர், நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த வர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர் களின் வீட்டைச்சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டுகள் சாதாரண வார்டு களாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட் டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண் ணிக்கை 13 ஆயிரத்து 101 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தொற்று பாதித்த வர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண் ணிக்கை 7,523 ஆக உயர்ந்துள் ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 55 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 753 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 87 பேர் முழுமையாக குண மடைந்து உள்ளனர். 543 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 123 பேர் இறந்து உள்ளனர்.

Next Story