மராட்டியத்தில் புதிதாக 12 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் புதிதாக 12 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Oct 2020 2:15 AM IST (Updated: 7 Oct 2020 2:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் புதிதாக 12 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று தணிந்து உள்ளது. இது பொதுமக்கள் இடையே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 12 ஆயிரத்து 258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 65 ஆயிரத்து 911 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நேற்று மாநிலத்தில் 17 ஆயிரத்து 141 பேர் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதுவரை 11 லட்சத்து 79 ஆயிரத்து 726 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

370 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் மேலும் 370 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 38 ஆயிரத்து 717 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் நேற்று 1, 625 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல நகரில் புதிதாக 47 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தாராவியில் புதிதாக 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 280 ஆகி உள்ளது.

Next Story