புதிதாக 9,993 பேருக்கு வைரஸ் தொற்று பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது + "||" + Newly infected 9,993 people infected with the corona in Bangalore are approaching 2 lakh
புதிதாக 9,993 பேருக்கு வைரஸ் தொற்று பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 9,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 91 பேர் இறந்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 6 லட்சத்து 47 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 9,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 705 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 9,370 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 91 பேர் இறந்து உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 9,461 ஆக உயர்ந்து உள்ளது.
புதிதாக பெங்களூரு நகரில் 34 பேர், மைசூருவில் 13 பேர், பெலகாவி, தட்சிண கன்னடாவில் தலா 7 பேர் உள்பட 91 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 10,228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 74 பேர் குணம் அடைந்து உள்ளனர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 151 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 92 ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 54 லட்சத்து 19 ஆயிரத்து 954 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 848 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பெங்களூருவில் இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரத்து 369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.