கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் கொடிசியா மையத்தில் முதியவர் சாவு - நோயாளிகள் திடீர் போராட்டம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் கொடிசியா மையத்தில் நேற்று ஒரு முதியவர் இறந்தார். இதனால் நோயாளிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை சிவானந்த காலனியை சேர்ந்த 66 வயது முதியவர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு கொடிசியாவில் உள்ள சிகிச்சை மையத்தில் அனு மதிக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று மாலை அங்குள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடி யாக அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி வந்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மார டைப்பால் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற் கனவே கடந்த மாதம் கொடிசியா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் இறந்தது குறிப் பிடத்தக்கது. சிகிச்சை பெற்று வந்த முதியவர் இறந்ததால் மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில் கொடிசியா சிகிச்சை மையத்தில் நோயா ளிகள் திடீரென்று போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், மருத்துவர்கள் யாரும் வருவதில்லை. செவிலியர்கள் மட்டுமே மையத்தில் இருக்கிறார்கள். இதனால் சிகிச்சை பலன் அளிப்பது இல்லை என்று கூறி திடீரென்று வெளியே வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத் துறையினர் விரைந்து சென்று அவர்களை சமாதானப் படுத்தினார்கள். கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். போலீசாரும் ஒலிபெருக்கி மூலம் நோயாளி களை சமாதானப்படுத்தினர்.

Related Tags :
Next Story