மாவட்ட செய்திகள்

முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் + "||" + First-Ministerial Candidate Announcement: AIADMK celebrates by offering sweets

முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
காஞ்சீபுரம்,

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதை அறிந்ததும் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்களுடன் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.


மேலும் பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி அருகே, நகர வங்கி தலைவர் பாலாஜி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

குண்ணவாக்கத்தில் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி திரளான அ.தி.மு.க.வினருடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மதுராந்தகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேற்கு ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார், அச்சரப்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் அனந்தமங்கலம் சுப்பிரமணியன், லத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.ராஜி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சன் ஆகியோர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பக்தவச்சலம், மாவட்ட பொருளாளர் விஜயபாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காட்டாங்கொளத்தூர்

காட்டங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க .சார்பில் செங்கல்பட்டு மாவட்டம். சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விழாவில் முன்னாள் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பலராமன், எஸ்.எம்.ரவிச்சந்திரன், சுதேஷ், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நகர செயலாளர் மு.க.சேகர், தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், நிர்வாகிகள் மனோஜ் இமயம், சரவணன், கோட்டக்கரை ரவி, ஓடை ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆரம்பாக்கம் பஜாரில் இளைஞர் இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் டி.சி.மகேந்திரன், ஒன்றிய செயலாளர் வி.கோபால் நாயுடு ஆகியோரின் தலைமையிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதே போல சுண்ணாம்புகுளம் பகுதியில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.எம்.ஸ்ரீதர், நிர்வாகி செந்தில் செல்வம் ஆகியோர் தலைமையிலும், புதுகும்மிடிப்பூண்டியில் எல்.சுகுமாறன் தலைமையிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதேபோல் முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் விநாயகர் கோவில் சாலை சந்திப்பில் நகரச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

வாலாஜாபாத்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அதி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகள் வெள்ளேரியான், கருணாகரன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் கட்சித்தொண்டர்களும் வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் மற்றொரு மசோதா கொண்டு வரப்படும்; காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டசபையில் மத்திய அரசின் வேளாண்சட்டங்களுக்கு எதிராக மற்றொரு மசோதா கொண்டு வரப்படும் என காங்கிரசின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறியுள்ளார்.
2. மாநில மின் நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு
மராட்டிய மாநில மின் பகிர்மான நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சார துறை மந்திரி நிதின் ராவத் தெரிவித்து உள்ளார்.
3. புதுவை மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
5. இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு
இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.