டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது


டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 5:28 AM IST (Updated: 8 Oct 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே டிராக்டரில் வெடிப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அருகே ஆனையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது டிராக்டரில், கிணறு வெட்ட பயன்படுத்தும் வெடிப்பொருட்களை உரிய பாதுகாப்பின்றி அஜாக்கிரதையாக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டிராக்டரை ஓட்டி வந்த கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தைச் சேர்ந்த கோபாலை (55) போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டர் மற்றும் அதில் இருந்த 39 குப்பிகளுடன் கூடிய வெடிப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக முத்துசாமியாபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் விஜயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story