கருமாண்டம்பாளையம், கொடுமுடியில் 9 பேருக்கு கொரோனா
கருமாண்டம்பாளையம், கொடுமுடியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஈரோடு,
ஊஞ்சலூர் அருகே உள்ள கருமாண்டாம்பாளையத்தை சேர்ந்த 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அருகே உள்ள சுப்பராயம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் ஒருவருக்கும் கெரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கொடுமுடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் உத்தரவின் பேரில் கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை டாக்டர் சோமசுந்தரம் தலைமையிலான மருத்துவ குழுவினர் கருமாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள 40 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் 4 நாட்கள் கருமாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடி நத்தமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பெரிய வட்டத்தை சேர்ந்த 39 வயது ஆணுக்கும், தளுவம்பாளையத்தைச் சேர்ந்த 37 வயது ஆணுக்கும், கொடுமுடி ரோஜா நகரைச் சேர்ந்த 35 வயது ஆணுக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தார்கள். இவர்கள் அனைவரும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Tags :
Next Story