மும்பையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா


மும்பையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Oct 2020 3:13 AM IST (Updated: 9 Oct 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற போதும், தலைநகர் மும்பையில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நகரில் இதுவரை இல்லாத அளவில் 2 ஆயிரத்து 823 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல நகரில் புதிதாக 48 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

நகரில் நோய் பாதித்தவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 675 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 26 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மும்பையில் இதுவரை 9 ஆயிரத்து 296 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

புனே மாவட்டம்

புனேயை பொறுத்தவரை புனே மாநகராட்சியில் 808 பேருக்கும், புறநகரில் 678 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 526 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Next Story