மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்த 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர் + "||" + 25 thousand people affected by corona were cured

கொரோனா பாதித்த 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

கொரோனா பாதித்த 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்.
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 386 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 326 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 349 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 30 ஆயிரத்து 539 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

அவர்களில் 4 ஆயிரத்து 727 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,701 பேர் ஆஸ்பத்திரிகளிலும் 3 ஆயிரத்து 26 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1.82 சதவீதம்

இதுவரை 25 ஆயிரத்து 256 பேர் குணமடைந்துள்ளனர். 556 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 461 பேர் புதுச்சேரியையும், 49 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை மாநிலத்தில் உயிரிழப்பு என்பது 1.82 சதவீதமாகவும், குணமடைவது 82.70 சதவீதமாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
2. வலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேைல நிறுத்தம் பணிகள் பாதிப்பு
வலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.
3. ஓமனில், கொரோனாவால் 311 பேர் பாதிப்பு
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. புதிதாக 3,005 பேருக்கு தொற்று அமீரகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
புதிதாக 3,005 பேருக்கு தொற்று அமீரகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.
5. அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில் புதிய கொரோனா தடுப்பூசி மையம்
அபுதாபியின் மஸ்தார் சிட்டி பகுதியில், புதிய கொரோனா தடுப்பூசி மையம் நேற்று திறக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை