மாவட்ட செய்திகள்

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 123 பேருக்கு கொரோனா தென்காசியில் 8 பேர் பாதிப்பு + "||" + Nellai, Thoothukudi and 123 others were affected and Corona Tenkasi was affected by 8

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 123 பேருக்கு கொரோனா தென்காசியில் 8 பேர் பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 123 பேருக்கு கொரோனா தென்காசியில் 8 பேர் பாதிப்பு
நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 123 பேருக்கு கொரோனா தென்காசியில் 8 பேர் பாதிப்பு.
தென்காசி,

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 7 ஆயிரத்து 174 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டு உள்ளனர். 239 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 145 பேர் பலியாகி உள்ளனர்.


நெல்லை மாவட்டத்திலும் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கு நேற்று 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 ஆயிரத்து 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 750 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 200 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 916 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 286 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 507 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 123 பேர் இறந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய சட்ட சபை ஊழியர்கள் எ.ம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை- 36 பேருக்கு தொற்று
மராட்டிய சட்ட சபை ஊழியர்கள், எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டனர்.
3. அனைவரும் தடு்ப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா ஹர்சவர்தன் தகவல்
கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார்.
4. தினசரி பாதிப்பு அதிகரிப்பு: 18,711 பேருக்கு புதிதாக கொரோனா
இந்தியாவில் மேலும் 18 ஆயிரத்து 711 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கி உள்ளது. இதுவே 59 நாட்களில் அதிகபட்ச பாதிப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. கொரோனா பாதிப்பால் சர்வதேச குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர்கள்
35-வது பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டின் கேஸ்டில்லோனில் நடந்தது.