மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது + "||" + Corona impact in the Marathas exceeded 15 lakhs

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டி உள்ளது.
மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 12 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது. மராட்டியத்தில் இதுவரை 15 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் 12 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 17 ஆயிரத்து 323 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை

இதேபோல மாநிலத்தில் புதிதாக 302 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 39 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையில் நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 73 ஆகி உள்ளது. இதேபோல நகரில் புதிதாக 47 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 343 ஆக உயர்ந்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.
3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.