கர்நாடகத்தில் புதிதாக 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு வைரஸ் தொற்றுக்கு மேலும் 114 பேர் பலி + "||" + In Karnataka, 10,913 new cases of coronavirus infection have killed another 114 people
கர்நாடகத்தில் புதிதாக 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு வைரஸ் தொற்றுக்கு மேலும் 114 பேர் பலி
கர்நாடகத்தில் புதிதாக 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 114 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 913 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 114 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,789 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 57 பேர், பெலகாவியில் 5 பேர், சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, கோலாரில் தலா 4 பேர், மைசூருவில் 10 பேர், துமகூருவில் 6 பேர் உள்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 1 லட்சத்து 9 ஆயிரத்து 980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 57 லட்சத்து 39 ஆயிரத்து 530 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
ஒரேநாளில் 9,091 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 851 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 873 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.