அரியலூர் மாவட்டத்தில், மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று


அரியலூர் மாவட்டத்தில், மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 Oct 2020 3:15 AM IST (Updated: 11 Oct 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களில் தலா 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 4 பேருக்கும் என மொத்தம் 31 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,070 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 3,259 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 775 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story