பள்ளிகளை திறப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம் மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்
பள்ளிகளை திறப்பதற் கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக மந்திரி வா்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே தீபாவளிக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் மந்திரி சபை ஆலோசனை நடத்தியது. இந்தநிலையில் மராட்டியத்தில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்பதை பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றன. சில பகுதிகளில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளையும் எடுத்து வருகின்றனர். பள்ளிகளை திறக்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம். எனினும் தற்போது தீபாவளி பண்டிகை வரை பள்ளிகள் திறக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி
இதேபோல கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரை கல்லூரிகளை திறக்கவும் அவசரம் காட்டப்போவதில்லை என உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story