அரசு ஊழியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
செவிலியர், வார்டு அட்டெண்டர் பதவிகளை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்துவது கண்டனத்திற்குரியது, எனவே 720 ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் மற்றும் வார்டு அட்டெண்டர் பணிக்கு எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணி செய்து வரும் 720 பல்நோக்கு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அவர்களை வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், வார்டு அட்டெண்டர் பதவிகளை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்துவது கண்டனத்திற்குரியது, எனவே 720 ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story