ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து திருவாரூர் அருகே, அ.ம.மு.க.வினர் சாலைமறியல்


ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து திருவாரூர் அருகே, அ.ம.மு.க.வினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Oct 2020 11:54 PM GMT (Updated: 11 Oct 2020 11:54 PM GMT)

திருவாரூர் அருகே ஒன்றிய செயலாளரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதை கண்டித்து அ.ம.மு.க. வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே குரும்பேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு சம்பந்தமாக நேற்றுமுன்தினம் இரவு விசாரணைக்காக வைப்பூர் போலீசார் மணிகண்டனை அழைத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த கட்சியினர் வைப்பூர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை திரண்டனர்.

சாலைமறியல்

இதனையடுத்து அத்துமீறி வீடு புகுந்து மணிகண்டனை அழைத்து சென்ற போலீசாரின் செயலை கண்டித்து கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அ.ம.மு.க. கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி சாலைமறியலை கைவிட்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தினால் திருவாரூர்-நாகூர் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story