2-ம் கட்ட கலந்தாய்வு: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
2-ம் கட்ட கலந்தாய்வுக்காக, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2020ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.), அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 2ம் கட்ட கலந்தாய்விற்காக மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 147 சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களின் பட்டியல் இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் 15ந் தேதி மதியம் வெளியிடப்படும். 16, 17ந்தேதிகளில் இணையதளம் வாயிலாக முன்னுரிமை விருப்ப அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு ஒதுக்கீடை உறுதி செய்து 19, 20ந் தேதிகளில் கட்டணம் செலுத்தலாம். மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9499055881 மற்றும் 8072345080 ஆகிய செல்போன் எண்ணிலோ அல்லது gitiperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9499055884 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது gitialathurperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களை 9488451405 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது dstoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தை 04328225352 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Related Tags :
Next Story