தாத்ராநகர் ஹவேலியில் முனிசிபல், பஞ்சாயத்து தேர்தல் அடுத்த மாதம் 8-ந்தேதி நடக்கிறது
யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
சில்வாசா,
யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலி, சில்வாசா, தாமன், டையூ ஆகிய பகுதிகளுக்கான கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்து, முனிசிபல் தேர்தலுக்கான அறிவிப்பு தேர்தல் கமிஷனால் தலைமை செயலகத்தில் வெளியிடப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் குமார் சிங், போலீஸ் சூப்பிரண்டு சரத்பாஸ்கர் தாரடே, உதவி கலெக்டர் அபூர்வா சர்மா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 8-ந்தேதி மாவட்ட மற்றும் கிராம பஞ்சாயத்து, முனிசிபல் தேர்தல் நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை
வேட்புமனு தாக்கல் வருகிற 21-ந் தேதியும், வேட்புமனு மறுபரிசீலனை 22-ந் தேதியும் நடைபெறுகிறது. வருகிற 24-ந் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் காலத்தில் அரசு வழிகாட்டுதலின் பேரில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் தினத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக வாக்கு செலுத்த கூடுதலாக 2 மணி நேரம் வாக்குசாவடி செயல்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story