புதிதாக 189 பேருக்கு தொற்று பாதிப்பு கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்தது
கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைந்தது. நேற்றைய நிலவரப்படி 189 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இதனால் அரசு அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து கொரோனாவின் வேகத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேர் வரை பரிசோதிக்கப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் வீடுவீடாகவும் சென்று சோதனையில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டனர்.
குறைந்தது
கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை பரிசோதிக்கப்பட்டனர். இதன் பயனாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து தொற்று பரிசோதனை எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 579 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 189 பேருக்கு தொற்று உறுதியானது. 264 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 208 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 658 பேருக்கு தொற்று இல்லை. 31 ஆயிரத்து 737 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 617 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ஆயிரத்து 668 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். 2 ஆயிரத்து 949 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 ஆயிரத்து 555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
565 பேர் உயிரிழப்பு
இதுவரை கொரோனாவுக்கு 565 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 470 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 49 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு 1.78 சதவீதமாகவும், குணமடைவது 83.67 சதவீதமாகவும் உள்ளது.

Related Tags :
Next Story