கே.வி.தங்கபாலுவுக்கு உடல் நிலை பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்


கே.வி.தங்கபாலுவுக்கு உடல் நிலை பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 13 Oct 2020 9:00 AM IST (Updated: 13 Oct 2020 9:34 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.தங்கபாலுவின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையே அவரின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இது தொடர்பாக முகநூலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.வி.தங்கபாலு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி அறிந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். நலம் பெற்று வருவதாக அவரும் தெரிவித்தார். அவர் நலம் பெற விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். கே.வி.தங்கபாலுவிடம், திருநாவுக்கரசர் எம்.பி.யும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

Next Story