போலீஸ்காரருக்கு கொரோனா: குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
குலசேகரன்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று குலசேகரன்பட்டினம் பகுதியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
குலசேகரன்பட்டிம்,
குலசேகரன்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று குலசேகரன்பட்டினம் பகுதியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கல்லாமொழி அனல்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள 2 ஊழியர்கள், குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 33 வயதான போலீஸ்காரர், செம்மறிக்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிக்சை அளித்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.
குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா துரை, பஞ்சாயத்து செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story